×

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த784 பேரிடம் நேர்காணல்

ஆவடி, நவ. 29: திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த 784 பேரிடம், நேற்று  நேர்காணல் ஆவடியில் நடந்தது.  திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்த கட்சியினரிடம் நேற்று  (28ம் தேதி) தொடங்கி டிசம்பர் 1ம் தேதி வரை ஆவடி மாநகர திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.  இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை திருவாலங்காடு கிழக்கு, மேற்கு, கடம்பத்தூர் கிழக்கு, மேற்கு, பூண்டி மேற்கு, வில்லிவாக்கம், புழல் ஆகிய ஒன்றியங்களுக்கும் மற்றும்  திருவள்ளூர் நகரத்திற்கும் விருப்ப மனு கொடுத்த கட்சியினரிடம் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் நேர்காணல் நடத்தினார்.

 அப்போது மாவட்ட, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர், நகரமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு விருப்ப மனு கொடுத்த 784 பேரிடம் கட்சியில் பொறுப்பு, ஆற்றிய பணிகள், போராட்டத்தில் பங்கேற்றது, சிறை சென்றது தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன், மாவட்ட துணைச்செயலாளர் நடுகுத்தகை ரமேஷ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பூவை ஜெரால்டு, ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ரமேஷ், மகாலிங்கம், அரிகிருஷ்ணன் பூண்டி கிறிஸ்டி, துரை வீரமணி, புழல் ஜெகதீசன், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : persons ,government ,election ,DMK ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்